கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறவித்து அரசு ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் ஊதியம் பிடித்தம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story