மாவட்ட செய்திகள்

சிறையில் இறந்து விட்டால்உடலை தானம் செய்ய முருகன் கோரிக்கைமுதல்-அமைச்சருக்கு கடிதம் + "||" + If you die in prison Murugan request to donate the body Letter to the First Minister

சிறையில் இறந்து விட்டால்உடலை தானம் செய்ய முருகன் கோரிக்கைமுதல்-அமைச்சருக்கு கடிதம்

சிறையில் இறந்து விட்டால்உடலை தானம் செய்ய முருகன் கோரிக்கைமுதல்-அமைச்சருக்கு கடிதம்
தொடர் உண்ணாவிரதத்தால் சிறையில் இறந்துவிட்டால் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி முருகன், முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பலமாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் சிறையில் முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

முருகன், நளினி ஆகிய இருவரும் விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முருகன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி, முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
2. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
3. ஜாமீன் வழங்க கோரி முருகன், கருப்பசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு - தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
ஜாமீன் வழங்க கோரி முருகன், கருப்பசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.