8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும், சாலை பணியாளர்களின் மாத ஊதியத்தை கருவூலம் மூலம் நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்க அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வளனரசு, மாவட்ட துணை தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் கோவிந்தராஜன், சவுந்தர், சுந்தர்ராஜ் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் மாவட்ட இணை செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார். 

Next Story