மாவட்ட செய்திகள்

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார் + "||" + BJP leader Amit Shah visits Erode today He discusses with weavers

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை கூறி வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு அருகே சித்தோட்டில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. ஈரோட்டிற்கு வரும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

முன்னதாக பகல் 11 மணிக்கு ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

ஈரோட்டில் அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி
நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதே பா.ஜ.க.வின் லட்சியம் ஆகும். புதுவை யில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க. உறுதி அளித்தது.
2. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்
நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
3. ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்
ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
4. பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து காரசார விவாதத்தின் போது பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் நடிகை ரம்யா மீது பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவி டுவிட்டரில் சாடியுள்ளார். அதாவது, குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை