மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை + "||" + A young man sentenced to 10 years in prison for breastfeeding, saying that she is married and married

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சி,

திருச்சி அருகே இனாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது27). மரம் ஏறும் கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு, 20 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறினார். மேலும் அவருடன் முருகன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்யுமாறு முருகனிடம் கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து, இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மகிழேந்தி நேற்று தீர்ப்பளித்தார். இதில் முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் 2 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் 2 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். தலைமறைவாக உள்ள வாலிபருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. தீபாவளி வசூல் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த நேபாள வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தீபாவளி வசூல் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த நேபாள வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
3. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
4. வெனிசூலாவில் சிறையில் மோதல்; 29 கைதிகள் பலி
வெனிசூலாவில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 29 கைதிகள் பலியானார்கள்.
5. சிறையில் லாலு பிரசாத்தை கொலை செய்ய சதி - ராப்ரிதேவி குற்றச்சாட்டு
சிறையில் லாலு பிரசாத்தை கொலை செய்ய சதி நடப்பதாக ராப்ரிதேவி குற்றம் சாட்டினார்.