மாவட்ட செய்திகள்

கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைது செய்யப்பட்டவர், கோர்ட்டில் ஆஜர் 28–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு + "||" + Aftershock idol in the temple: Arrested, ordered to be kept in custody till 28 days

கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைது செய்யப்பட்டவர், கோர்ட்டில் ஆஜர் 28–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைது செய்யப்பட்டவர், கோர்ட்டில் ஆஜர் 28–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
கோவை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடியதாக கைது செய்யப்பட்டவர், கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28–ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
கும்பகோணம்,

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பட்டத்துஅரசி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 12–ந் தேதி இரவு இக்கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த 2½ அடி உயரம் கொண்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய பட்டத்து அரசி அம்மன் ஐம்பொன்சிலை, தங்க நகை, கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி ரமேஷ்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மகன் தண்டபாணி (வயது37) என்பவருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் இருந்து ஐம்பொன் பட்டத்துஅரசி அம்மன் சிலையை போலீசார் மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தண்டபாணியை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன்பிள்ளை முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது தண்டபாணியை வருகிற 28–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக மீட்கப்பட்ட சிலையை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அந்த சிலையை கோவில் செயல் அதிகாரி ரமேஷ்குமாரிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடியதாக நேபாள எல்லையில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
திருச்சி அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் நேபாள எல்லையில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
2. ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டு போலீசார் விசாரணை
திருத்துறைப்பூண்டி அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருட்டு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
4. கரூர் பஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கரூர் பஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆம்னி பஸ்சை திருடியவர் கைது
திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆம்னி பஸ்சை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.