கரூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்


கரூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கரூர்,

கரூரில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வந்தார். பின்னர் அவர் நேற்று மதியம் கரூர் ரெயில் நிலையத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரூர் ரெயில்வே போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்தும், மேலும் ரெயில்வே தண்டவாளத்தில் விதிகளை மீறி நடந்து செல்வோர், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வோர் உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை சரி பார்த்தார்.

மேலும் ரெயில்வே போலீசாரிடம் தனிதனியாக குறைகள் ஏதும் இருக்கிறதா? என கேட்டறிந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது, ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங் கர் உள்பட போலீசார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story