அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.65 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.65 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:45 AM IST (Updated: 15 Feb 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.65 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

அந்தியூர், 

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 873-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 310-க்கும் விற்பனை ஆனது.

பருத்தி மொத்தம் ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போனது. தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்துச்சென்றனர்.

Next Story