மும்பையில் உள்ள போலீஸ் ஆஸ்பத்திரிகளை சீரமைக்க ரூ.1½ கோடி சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை வழங்குகிறது
மும்பையில் உள்ள போலீஸ் ஆஸ்பத்திரிகளை சீரமைக்க சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை ரூ.1½ கோடி வழங்குகிறது.
மும்பை,
மும்பையில் உள்ள போலீஸ் ஆஸ்பத்திரிகளை சீரமைக்க சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை ரூ.1½ கோடி வழங்குகிறது.
போலீசாருக்கு ரூ.1½ கோடி
மும்பை பிரபாதேவியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.90 கோடி நன்கொடையாக கிடைக்கிறது. இந்த பணத்தை வைத்து கோவில் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை மும்பை போலீசாரின் நலனுக்காக ரூ.1½ கோடி நிதி வழங்க உள்ளது. இந்த முடிவுக்கு கோவில் அறக்கட்டளை ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணம் மும்பை போலீசாரிடம் வழங்கப்படும் என்று அறக்கட்டளை தலைவர் ஆதேஷ் பந்தேக்கர் கூறினார்.
ஆஸ்பத்திரி சீரமைப்பு
சித்திவிநாயகர் அறக்கட்டளை வழங்கும் பணத்தை வைத்து நாக்பாடா மற்றும் நைகாவில் உள்ள போலீஸ் ஆஸ்பத்திரியை சீரமைக்க மும்பை போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘கோவில் அறக்கட்டளை வழங்கும் நிதியை வைத்து போலீஸ் ஆஸ்பத்திரிக்கு எக்ஸ்ரே கருவி, பல் மருத்துவ உபகரணங்கள், ரத்த பரிசோதனை கருவி, மனஅழுத்த சோதனை கருவி மற்றும் போலீசாரின் உடல்நலனை மேம்படுத்த டிரட்மில் உள்ளிட்ட உடற்பயிற்சி சாதனங்களும் வாங்கப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story