இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நபி தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் அனிபா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கட்டுப்பாடு இல்லாமல் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story