கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்
திருபுவனம் அருகே படுகொலை செய்யப்பட்ட பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவியை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வழங்கினார்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில், பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்து உள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ராமலிங்கத்தின் மனைவி சித்ரா, மகன்கள் ஷியாம் சுந்தர், மலர்மன்னன், இளவரசன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
இதில் உலகளாவிய இந்து அமைப்புகளின் மூலம் திரட்டப்பட்ட ரூ.56 லட்சம் நிதி உதவியை ஆன்லைன் மூலமாக ராமலிங்கத்தின் மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதற்கான ஆவணத்தை எச்.ராஜா, ராமலிங்கத்தின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வளர்த்து வருகிறது. இந்த சம்பவத்தை அனைவரும் கண்டிப்பதோடு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
துணை ராணுவ வீரர்கள் பலியாக காரணமாக இருந்த தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசு தோல்வி அடைந்ததாக யாரும் கருதக்கூடாது. இந்த சம்பவத்தில் ‘ஜெய்ஷ் இ முகமது’ இயக்கம் ஈடுபட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது ராணுவம் வலிமையானது. நமது ராணுவ தளபதிகள் திறமையானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story