மாவட்ட செய்திகள்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம் + "||" + Traffic Ramaswamy protest demanding the removal of banners

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்கள் (விளம்பர பதாகைகள்) வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று கோவை வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருந்த பேனர்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனே அகற்றக் கோரியும் தரை யில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வந்து அந்த பகுதியில் இருந்த 3 பேனர்களை அகற்றினர்.

இதைத்தொடர்ந்து டிராபிக் ராமசாமி, தலைமை தபால் நிலையம் அருகே சென்றார். அங்கும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றையும் அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் பேனர்களை அகற்றினால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் மீண்டும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர் போராட்டத்தை கைவிட்டு ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார்.

இது குறித்து டிராபிக் ராமசாமி கூறும்போது, கோவையில் அனுமதியின்றி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்றார். இதே போல் பேனர்களை அகற்ற கோரி கோவையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு
தார்வாரில், 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்கு பிறகு ஒரு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
2. தார்வார் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்
தார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் உயிருடன் சிக்கி இருக்கும் அதிர்ச்சிதகவல் நேற்று வெளியானது.
3. பிச்சம்பாளையம் அருகே பள்ளி முன் பெற்றோர் தர்ணா போராட்டம் புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தினர்
பிச்சம்பாளையம் அருகே கேத்தம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சம்பள பாக்கியை வழங்கக்கோரி சுதேசி, பாரதி மில் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
சம்பள பாக்கியை வழங்கக்கோரி சுதேசி, பாரதி மில் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினார்கள்.