மாவட்ட செய்திகள்

மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது + "||" + Generator thieves arrested

மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது

மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது
மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை,

மாவட்டத்தில் மைக்செட் நடத்தி வருபவர்களிடமும், திருமண மண்டபங்களிலும் ஏராளமான ஜெனரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவை தொடர்ந்து திருடு போய்வருவதாக பல்வேறு போலீஸ்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் திருப்பத்தூர் தாலுகா ஆத்திரான்பட்டி என்ற ஊரில் மைக்செட் வைத்துள்ள சேவகன் என்ற செல்வம் (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த வீரன் (32) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணங்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நமுனை சமுத்திரம், நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி உள்பட பல பகுதிகளில் ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 ஜெனரேட்டர்கள், தலா 10 ஸ்பீக்கர், விலையுயர்ந்த விளக்குகளை கைப்பற்றினர்.


தொடர்புடைய செய்திகள்

1. போடி அருகே மலைக்கிராமத்தில் ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் மோதல்; தொழிலாளி மீது துப்பாக்கி சூடு, மைத்துனர் கைது
போடி அருகே ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
2. மது விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
சேலத்தில் மது பதுக்கி விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 190 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
3. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபர் கடத்தல்; 2 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. 5 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததன் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ததன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
5. ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.