மாவட்ட செய்திகள்

புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார் + "||" + Suburban district on behalf of the AIADMK Parliament election consultation meeting

புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்

புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்
புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மதுரை,

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்கின்றனர். மாலையில் உசிலம்பட்டியில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்–அமைச்சருமன ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலையில் சோழவந்தான் தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன் பங்கேற்கின்றனர். மாலையில் மேலூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கின்றனர்.

20–ந் தேதி காலையில் திருமங்கலத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார். மதுரை கிழக்கு தொகுதியில் மாலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் பேட்டி
வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.
2. முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது என ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
3. வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி
வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.
4. கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி: தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு
‘கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது என்றும், தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றும் தேனி பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. சென்னையில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான அனுமதி வழங்குவது எப்போது? அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது.