மாவட்ட செய்திகள்

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + Ariyur Chelandinamman Temple Kumbabhishekam was attended by a large number of devotees

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்,

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், ஆரியூரில் வெண்டுவன்குல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்லாண்டியம்மனுக்கும், பரிவார தெய்வங்களாகிய விநாயகர், கருப்பண்ண சாமி, மதுரை வீரன் சாமி, சப்த கன்னிமார் அம்பிகை சுவாமி, வேட்டைக்கார, வெண்டுவன்குல கவுண்டர் சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவற்றில் குடிபாட்டு மக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்தது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள 48 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை யாக சாலையில் வைத்து 78 சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை நேற்று காலை ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் மேள முழக்கத்துடன் எடுத்து சென்றனர். தொடர்ந்து கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேத மந்திரம் ஓதப்பட்டது.

அதன்பின் திருப்பணிக் குழு தலைவரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பச்சை கொடி அசைத்து வைத்து, ஒரே நேரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பரிவாரசுவாமிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 600 சமையல் கலைஞர்களை கொண்டு உணவுதயார்படுத்தப்பட்டு ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவரும், தமிழக அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அறங்காவலர் குழு தலைவர் ஆசி.எஸ்.முத்துசாமி, முன்னாள் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் ரெயின்போ ஆர்.சேகர், திருப்பணி குழு நிர்வாகிகள், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தில் ஆசி எக்ஸ் போர்ட்ஸ் எம். கதிர்வேல், எம்.செல்வராஜ், தேவக்கோட்டை கரூர் பால்பண்ணை உரிமையாளர்கள் பி.பாலசுப்பிரமணியன், பி.கார்த்திக், பி.பாலாமணி, பி.காயத்திரி, திருப்பூர் எஸ்.கே.கிரியேசன் கே.செல்லமுத்து, சிவசெல்வி, வீனஸ் முருகேசன், மூலக்காண்டனூர் எம்.கருப்பண்ணன், கரூர் டாக்டர் பார்மா கே.சி.பாலசுப்பிரமணியம், சுமதி இனிப்பகம் குழந்தையப்பன், ஆதவன் பைனான்ஸ் கே.பெரியசாமி, கொங்கு நண்பர்கள் சங்க துணை தலைவர் எஸ்.கே. சிவக்குமார், மூலனூர் எஸ்.சிபி, ஆஸ்கார் சி.சுப்பிரமணியன், முன்னாள் தாந்தோணி ஒன்றிய செயலாளர் எம்.கே. பழனியப்பன், பழனிசாமி அன்கோ சி.எம்.கே.பழனிசாமி, என்ஜினீயர் பி.சதீஸ்குமார், ஆண்டாங் கோவில் புதூர் கே.கே.முத்துகுமார், அமிட்டோ பேப்ரிக்ஸ் என்.காந்தி, சாஸ்தா பியூல்ஸ் பூபதி, சுப்பீரியர் காட்டன் சுந்தர், ஷோபா காட்டன்ஸ் சுரேஷ், ஜெ.பி.கெமிக்கல்ஸ் சதாசிவம், ஆரியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.கே. கருப்புசாமி,முன்னாள் துணைத்தலைவர் சி.பி. பழனிச்சாமி, ரிலையன்ஸ் பேப்ரிக் ஜெயசந்திரன், சின்ன முத்தாம்பாளையம் எம்.பெரியசாமி, நல்லி செல்விபாளையம் ஜெகதீசன், இச்சியப்பட்டி லட்சுமணன், அரிமா டெக்ஸ் ஜெகதீசன், சித்ரா டிரேடர்ஸ் கே.நல்லுசாமி, அஸ்வினி இண்டர் நேஷனல் செல்வராஜ், சின்னமுத்தாம் பாளையம் முத்துசாமி, ஜி.எல்.டெக்ஸ்டைல்ஸ் ராஜசேகரன், கல்மேட்டுபட்டி ராமசாமி, வென்கார்டு பொன்னுசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.