கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி


கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. கலைத்துறையில் மட்டுமே உள்ளார் என கி.வீரமணி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரதவீதியில் திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. சுந்தரமூர்த்தி வரவேற்று பேசினார். மாநாட்டில் பூங்குன்றன், ஜெயக்குமார், எடிசன்ராஜா மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள். மாநாட்டில் கலந்து கொண்டு தி.க.தலைவர் கி.வீரமணி பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திராவிடர் கழக சமூகநீதி மாநாடு வருகிற 23, 24–ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது.

ரஜினிகாந்த் அரசிலுக்கு இன்னும் வரவில்லை, கலைத்துறையில் மட்டுமே உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. பா.ஜ.க. மூழ்கும் கப்பல். தமிழக மக்கள் பா.ஜ.க.வை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த பொன்னையா உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story