ரஜினியின் அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா? தொல்.திருமாவளவன் கருத்து


ரஜினியின் அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா? தொல்.திருமாவளவன் கருத்து
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது புதிய அறிவிப்பல்ல. ஏற்கனவே அறிவித்த அறிவிப்பை தான் தற்போது வெளியிட்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. ரஜினிகாந்த் தமிழகத்திற்கு தண்ணீர் தரும் கட்சியை உறுதி செய்து அவர்களுக்கு வாக்களிக்க ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இது, காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே போட்டியை ஏற்படுத்துவதற்காகவா? அல்லது தமிழக அரசியல் கட்சிகளிடையே போட்டியை ஏற்படுத்துவதற்காகவா? என குழப்பமாக உள்ளது. ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெளிவான வழி காட்டுதல் இல்லாமல் குழப்பமான வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறார். அவருடைய அறிவிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க. வலிமையான கூட்டணியாக உள்ளதால் கமல்ஹாசன் தொடர்ந்து தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து பொதுவாக ஊடகங்களில் தெரிவிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story