வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்


வேலைவாய்ப்பு செய்திகள்  : அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 18 Feb 2019 1:48 PM IST (Updated: 18 Feb 2019 1:48 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

காப்பீட்டு நிறுவனம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து, மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் (https://uiic.co.in) பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏ4 காகிதத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

சி.டி.ஏ.சி.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ், அதிநவீன கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (சி.டி.ஏ.சி.) செயல்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தின் நொய்டா கிளையில் திட்ட மேலாளர், பொறியாளர், அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 76 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலாளர், அதிகாரி பணிகளுக்கு 50 வயதுடையவர்களும், திட்டப் பொறியாளர் பணிக்கு 37 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ., எம்.டெக் மற்றும் சட்டம், சி.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 25-2-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

திட்ட மேலாளர் மற்றும் திட்ட அதிகாரி பணி களுக்கு மார்ச் 9-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. திட்ட பொறியாளர் பணிக்கு மார்ச் 9-ந் தேதி ஆன்லைன் தேர்வும், மார்ச் 10-ந் தேதி நேர்காணலும் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.cdac.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

எரிவாயு நிறுவனம்

இந்திய எரிவாயு நிறுவனமான கெயில் நிறு வனம், இந்தியாவின் முன்னணி கியாஸ் நிறுவனமாகும். மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது கேட் தேர்வு அடிப்படையில் பட்டதாரி என்ஜினீயர்களை எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள், இறுதி பருவத் தேர்வை எதிர்கொள்பவர்கள், விண்ணப்பிக்கலாம். கேட்-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்www.gailonline.com என்ற இணையதளத்தில் பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசி நாள் 13-3-2019-ந் தேதியாகும்.

நிலக்கரி நிறுவனம்

எஸ்.இ.சி.எல். எனப்படும் தென்கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவன கழகத்தில் தற்போது மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிாிவினருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் 33 வயதுக்கு உட்பட்ட ஓ.பி.சி, பிரிவினரும், 35 வயதிற்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன் மைனிங் சர்வே சான்றிதழ் பெற்றவர்கள் டெபுட்டி சர்வேயர் பணிக்கும், மைனிங் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் மைனிங் சர்தார் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.secl-cil.in/Default.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story