பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:08 PM IST (Updated: 18 Feb 2019 3:08 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. தற்போது இந்த வங்கியில் சீனியர் மேனேஜர், மேனேஜர் அண்ட் ஆபீசர் (ஐ.டி.) போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 84 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன.

பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள்: கிரெடிட் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 51 பேரும், மேலாளர் பணிக்கு 26 பேரும், சட்டப் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 55 பேரும், மேலாளர் பணிக்கு 55 பேரும், எச்.ஆர்.டி. மேலாளர் பணிக்கு 18 பேரும், ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 120 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளில் அதிகபட்சம் 37 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை படிப்புகளுடன் குறிப்பிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-3-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 24-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.pnbindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Next Story