வடுவூர் தென்பாதியில் 250 விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


வடுவூர் தென்பாதியில் 250 விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 19 Feb 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் தென்பாதியில் 250 விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 73 ஆயிரம் தென்னை மரங்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் விலையில்லா தென்னங்கன்றுகளும், ஊடுபயிராக உளுந்து மற்றும் எள் பயிர்கள் சாகுபடி செய்ய விலையில்லா இடுபொருட்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.அதேபோல 3,500 எக்டேரில் பயறு வகை சாகுபடி செய்ய 1 எக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 40 லட்சமும், எள் சாகுபடி செய்ய 1 எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 1,000 எக்டேருக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்ததிட்டத்தின்படி திருவாரூர் மாவட்டம் வடுவூர் தென்பாதியில் 250 விவசாயிகளுக்கு விலையில்லா 500 தென்னங்கன்றுகள், 2 டன் உளுந்து விதை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், உளுந்து விதை ஆகியவற்றை வழங்கினார்.

இதில் வேளாண்மைதுறை இணைஇயக்குனர் சந்துரு, துணை இயக்குனர் சிவக்குமார், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் கார்த்திகேயன், நிலவள வங்கி தலைவர் செந்தில்ராஜ், வேளாண்மை துறை உதவி இயக்குனர் தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story