நீடாமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்


நீடாமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:15 AM IST (Updated: 19 Feb 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே புள்ளவராயன்குடிகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பீரோ மற்றும் மாணவர்கள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு நீடாமங்கலம் வட்டாரக்கல்வி அதிகாரி செல்வம் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி, அறம் நற்பணி இயக்க தலைவர் பாண்டியன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விழாவில் ஆசிரியர் பயிற்றுனர் பூபாலன், மகாத்மா காந்தி நற்பணி இயக்க தலைவர் பாலசவுந்திரம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பள்ளியில் இணையதள சேவையை வட்டார கல்வி அதிகாரி சம்பத் தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அருள் வரவேற்று பேசினார். முடிவில் ஆசிரியை பிரபாவதி நன்றி கூறினார்.

Next Story