மாவட்ட செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை + "||" + The suicide of a worker who was poisoned by poisoning his wife for drinking alcohol

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கொரடாச்சேரி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பெருமாளகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது55). விவசாய கூலித்தொழிலாளி. இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரை அவரது மனைவி கண்டித்தார்.


இதில் மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

இதுகுறித்து ஆறுமுகம் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
2. லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப தகராறில் துயர முடிவு
லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப தகராறு காரணமாக இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.
3. பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய 10-ம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை 4 பேருக்கு வலைவீச்சு
திருவாரூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிய 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை
கடன் தொல்லையால் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.