கோவையில், போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
கோவையில், போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உதவி கமிஷனர்களும். புறநகரில் துணை சூப்பிரண்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை சூப்பிரண்டாக பணியாற்றும் பி.கண்ணன் கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷன ராக பணியாற்றும் ஆர்.கே. ஜனார்த்தனன் சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷன ராகவும், கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் டி.கே.கே.செந்தில்குமார் சேலம் மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றும் சி.ராஜராஜேஸ்வரன் கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டாகவும், கோவை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றும் ஓ.எச்.ராஜு நாமக்கல் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு துணை சூப்பிரண்டாகவும், கோவை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றும் சி.கார்த்திகேயன் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்ட துணை சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அதிரடிப்படை துணை சூப்பிரண்டாக பணியாற்றும் பி.பி.முருகன், கோவை மாநகர குற்றப்பதிவேடு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றும் பி.ராஜ்குமார், கோவை தெற்கு பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகரம் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனராக பணியாற்றும் ஆர்.ரமேஷ் கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு பகுதி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். கோவை கிழக்கு பகுதி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனராக பணியாற்றும் டி.சுரேஷ், திருப்பூர் மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுளளார்.
தமிழகம் முழுவதும் 16 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். அதில், கோவை மாநகர மதுவிலக்கு கூடுதல் துணை கமிஷனராக பதவி வகித்து வரும் ஏ.முருகசாமி, நாமக்கல் மாவட்ட தலை மையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஜி.கோபி, கன்னியாகுமரி மாவட்ட தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story