மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: தலை நசுங்கி காற்றாலை ஊழியர் சாவு + "||" + Unidentified vehicle collision: Head crushed windmill employee death

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: தலை நசுங்கி காற்றாலை ஊழியர் சாவு

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: தலை நசுங்கி காற்றாலை ஊழியர் சாவு
ஆரல்வாய்மொழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி காற்றாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் கிருஷ்ண தினேஷ் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண தினேஷ், தனது மோட்டார் சைக்கிளில் காவல் கிணறு நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண தினேஷ், அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு: தோகைமலை அரசு சுகாதார நிலையத்தில் அதிகாரி விசாரணை
செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் குறித்து அரசு சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் விசாரணை நடத்தினார்.
2. டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு அரசு சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
தோகைமலையில் டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரவசம் பார்த்ததில் குழந்தை இறந்ததால், அரசு சுகாதார நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
3. மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்: கல்லூரி மாணவர் சாவு போலீசார் விசாரணை
கீழ்வேளூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு
ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார்.
5. தோப்புக்குள் அழைத்து சென்று இளம்பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்று தாக்குதல் சுயஉதவிக்குழு கடன் வழங்கும் ஊழியர் கைது
தஞ்சை அருகே தோப்புக்குள் இளம்பெண்ணை அழைத்து சென்று அவரை புகைப்படம் எடுக்க முயன்று தாக்கிய சுயஉதவிக்குழு கடன் வழங்கும் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.