ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* 1992- குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.
* 1.8.1994- தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.
* 14.10.1996- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.
* 20.8.1997- ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் புகையால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்று புகார்.
* 23.11.1998- ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.
* 23.3.2013- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன.
* 29.3.2013- இந்த தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் ஜெயலலிதா உத்தரவு.
* 2.4.2013-உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது.
* 31.5.2013- தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
* 12.2.2018- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
* 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
* 22.5.2018- குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100-வது நாளில் தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் சாவு. ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
* 23.5.2018- தூத்துக்குடி பொதுமருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகே போலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் சாவு. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.
* 28.5.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
* 22.6.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.
* 15.12.2018- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
* 2.1.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
* 18.2.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
Related Tags :
Next Story