ஆரணியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆரணியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆரணி,
ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மருசூர் கூட்ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நெசல் காலனியை சேர்ந்த திரு என்ற திருநாவுக்கரசு (வயது 23), சூரியா (23), அப்பு என்ற ராஜ்குமார் (22), பல்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே ஆரணி தாலுகா, ஆரணி டவுன் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளது. இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் திருநாவுக்கரசு, அப்பு, மணி, சூரியா ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் வேலூர் மத்திய சிறையில் உள்ள 4 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story