காங்கிரசில் சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு


காங்கிரசில் சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:15 PM GMT (Updated: 19 Feb 2019 9:14 PM GMT)

காங்கிரசில் சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கான பிரசாரத்தையும் அவர் ஏற்கனவேதொடங்கிவிட்டார். மதசார்பற்ற கட்சிகள் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் காங்கிரஸ் ஆதரவு வழங்க மறுத்துவிட்டது.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில்நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தோம். பிரகாஷ்ராஜ் தனக்கு ஆதரவு வழங்குமாறு சித்தராமையா மற்றும் என்னிடம்(தினேஷ் குண்டுராவ்) கோரிக்கை விடுத்துள்ளார். எங்களது தேசிய கட்சி. காங்கிரசில் சேர்ந்தால் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு வழங்கப்படும். இதை எங்கள் கட்சியின் மேலிடம் கூறியது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story