மாவட்ட செய்திகள்

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு + "||" + Crash Kills The Sivakasi army soldier's family Compensation

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ராம்பிரசாத்(வயது23). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ வீரராக இருந்தார். திருவனந்தபுரம் முகாமுக்கு சென்று இருந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 25.5.2017 அன்று இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ராம்பிரசாத் உயிரிழந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் மற்றும் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இழப்பீடு கோரி ராம்பிரசாத்தின் பெற்றோர் லட்சுமணன்,செல்வி ஆகியோர் விருதுநகரிலுள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பரிமளா அதனை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர், ராம்பிரசாத் குடும்பத்துக்கு ரூ.50 லட்சத்து 4ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதில் 80 சதவீதத்தை மதுரையிலுள்ள இரு சக்கர வாகன இன்சூரன்சு நிறுவனமும் மீதமுள்ள 20 சதவீததொகையை விருதுநகரிலுள்ள லாரி நிறுவனத்தின் இன்சூரன்சு நிறுவனமும் 7½ சதவீத வட்டியுடன் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி வேன் மோதி, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மினிபஸ் ஏறி சாவு
கம்பம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த மினி பஸ் ஒரு வாலிபர் மீது ஏறியதில் அவர் இறந்தார். மற்றொரு வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
2. திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலியானார்.
3. திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
திருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
5. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.