வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்துமாறு கூறியுள்ளது. அதன்படி புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இரு நாட்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருப்பார்கள்.
எனவே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும் தங்களின் பெயர் தற்போதைய வாக்காளர் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு செய்யலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை உடனே பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் உங்களின் வாக்குச்சாவடியில் அமர்ந்துள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.
பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படம், இருப்பிட சான்றிதழ், வயது சான்றிதழ், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அதன் நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் தொகுதிகள் இடமாற்றம் செய்வதற்கும் விண்ணப்ப படிவங்கள் பெறப்படும்.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்கி தங்களின் வாக்குரிமையை உறுதிபடுத்தி வருகின்ற தேர்தலில் வாக்களிக்கவும் மற்றும் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் தேர்தல்துறைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story