வானவில் : மாத்திரை வடிவிலான புரொஜெக்டர்


வானவில் : மாத்திரை வடிவிலான புரொஜெக்டர்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:25 PM IST (Updated: 20 Feb 2019 3:25 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கர் நிறுவனம் மாத்திரை வடிவிலான (கேப்சூல்) சிறிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நெபுலா கேப்சூல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது ஸ்கிரீன் மிரரிங் வசதிகொண்டது. இதை ஏர்பிளே, மிராகாஸ்ட் மூலம் மிரரிங் செய்யலாம். 360 டிகிரி கோணத்தில் ஒலியை பரப்பும் வகையில் இதன் ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அறை முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இந்த புரொஜெக்டர் மூலம் 100 அங்குலம் வரை காட்சிகளை பெரிதுபடுத்தி பார்க்க முடியும். இது ஆண்ட்ராய்டு 7.1 நவுகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. இது வீடியோ ஸ்கிரீமிங்கிற்கு ஏற்றது. எத்தகைய செயலியிலும் செயல்படக் கூடியது. மேலும் இதில் டி.எல்.பி. தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது அறையின் வெளிச்சத்துக்கேற்ப காட்சிகளின் ஒளி அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும்.

இந்த புரொஜெக்டர் மூலம் காட்சிகளை அறையின் மேற்கூரையில் ஒளிபரப்பி படுத்துக் கொண்டே காட்சிகளை ரசிக்கலாம். சாதாரண திரையிலும் இதை பார்க்க முடியும். இதில் நெட்பிளிக்ஸ், யூ-யூப் உள்ளிட்டவற்றின் செயலிகளும் உள்ளது. இதனால் இதை செயல்படுத்த ஸ்மார்ட்போன் அவசியமில்லை. இதில் மிரரிங் வசதி இருப்பதால் மொபைலிலிருந்து காட்சிகளை இதற்கு அனுப்பி அதிலிருந்தும் பார்க்க முடியும். இந்த புரொஜெக்டரின் விளக்கு 30 ஆயிரம் மணி நேரம் செயல்படக் கூடியது. இதில் 5,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் தொடர்ந்து 4 மணி நேரம் இயங்கக்கூடியது. இதில் புளூடூத் 4.0 வசதி ஹெச்.டி.எம்.ஐ. 1.4 வசதி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. சப்போர்ட் ஆகியன உள்ளது.

இந்த புரொஜெக்டர் 4.72 அங்குலம் உயரம் கொண்டது. இதன் சுற்றளவு 2.67 அங்குலம். இதனால் இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை சுமார் ரூ.31,999 ஆகும்.

Next Story