வானவில் : உலகின் மிகச் சிறிய கேமரா
உலகின் மிகச் சிறிய கேமராவை மோகாகேம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கேமரா லென்ஸ் உள்ளது.
வீடியோ காட்சிகளை 4 கே 25 எப்.பி.எஸ். வேகத்தில் பதிவு செய்யும். 4.5 சென்டி மீட்டர் நீள, அகலம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.14,129.
இது நீர் புகா தன்மை கொண்டது. 60 மீட்டர் ஆழம் வரை சென்றாலும் இது பாதிப்புக்குள்ளாகாது.
ஆழ்கடல் நீச்சல் செல்வோர் அழகிய காட்சிகளை படமெடுக்க மிகவும் உபயோகமாக இருக்கும். 270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. வீடியோ காட்சிகளை பதிவுசெய்ய ஓரிடத்தில் இதை ஒட்ட வைக்க முடியும். 4 மணி நேரம் தொடர்ந்து வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்டது.
Related Tags :
Next Story