வானவில் : பிரபலமாகி வரும் லை-பை


வானவில் : பிரபலமாகி வரும் லை-பை
x
தினத்தந்தி 20 Feb 2019 12:13 PM GMT (Updated: 20 Feb 2019 12:13 PM GMT)

வை -பை என்ற பெயரை சிறு குழந்தையும் அறியும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தை காட்டிலும் தற்போது ஒளியில் இயங்கக்கூடிய லை-பை ( LI FI ) வெகுவாக பிரபலமாகி வருகிறது.

இதன் பயன்கள் அப்படியே வை-பையை போன்றே இருக்கும். செயல்படும் முறையில் மட்டுமே வேறுபாடு இருக்கும். இந்த ஒளி தொழில்நுட்பத்தில் தகவல்களை ஒளி கற்றைகளாக சேகரித்து அவற்றை மின்சார அலைகளாக மாற்றி எந்த ஸ்மார்ட் கருவிக்கும் தருவிக்கிறது.

இந்த நுட்பத்தை பயன்படுத்தி பொது நூலகங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு விளக்கை, பிரிட்டனை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சி 224 என்கிற இந்த விளக்கின் மூலம் ஒரே நேரத்தில் நான்கு கருவிகளை இணைத்து கொள்ளலாம். தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இந்த விளக்கை அணைத்திருந்தாலும், இதிலிருந்து வெளி வரும் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் தொடர்ந்து இயங்கும். லை-பை ரிசீவர் பொருத்தப்பட்டுள்ள எந்த கருவிக்கும் தகவல்களை அனுப்பலாம்.

Next Story