கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்–அதிகாரிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்.
நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் நேற்று 3–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்தன. சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சிம்கார்டுகள் விற்பனையும் தடைபட்டது.
3–வது நாள் போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள், அமைப்பாளர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர்.
அதிகாரிகள் சங்க அகில இந்திய பொருளாளர் ராஜன், ஊழியர்கள் சங்க மாநில உதவி செயலாளர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வராஜ், செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதேபோல் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொலைபேசி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ராஜூ கூறியதாவது:–
3 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் (அதாவது நேற்று) நிறைவடைந்துள்ளது. எனவே நாளை (இன்று) முதல் வழக்கம்போல் நாங்கள் பணிக்கு திரும்ப இருக்கிறோம். இதுவரை அரசு தரப்பில் எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. எனவே அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய டெல்லியில் அகில இந்திய சங்கங்களின் தலைவர்கள் கூடுகிறார்கள். அந்த முடிவின் அடிப்படையில் போராட்டம் தொடரும் என்றார்.

Related Tags :
Next Story