மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + BSNL emphasize demands. Officials-Demonstrators

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் முன்மொழிவின்படி 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்.யின் நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 18-ந்தேதி நாடு முழுவதும் தொடங்கினர். அதன்படி பெரம்பலூர்- அரியலூரிலும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளான நேற்று பெரம்பலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் ராஜப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். பெரம்பலூர் கிளை செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கடந்த 3 நாட்களாக பெரம்பலூரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலத்திலும், அரியலூரில் கல்லூரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திலும் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவை, தொலைபேசி, செல்போனுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். மேலும் அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. குமரியில் 4 இடங்களில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம், விருதுநகர், ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர், ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் பெண் மயங்கி விழுந்தார்
தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.