மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்ட, மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை திறப்பு விழா மற்றும் அந்த சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட குழு பேரவைக்கூட்டம் குன்னம் தாலுகா நன்னை கிராமத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைமைக்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமைக்குழு உறுப்பினர்கள் செல்வம், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவருமான லாசர் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா முதல் கடலூர் மாவட்டம் வரை வெள்ளாற்றில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளுக்கென தனியாக மணல் குவாரி அமைத்திட வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ளது போல, பெரம்பலூர் மாவட்டத்திலும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும். மாடுகள், வண்டிகள் வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். தமிழகத்தின் பாரம்பரியமான மாட்டு வண்டி தொழிலை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நன்னை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். இதில் மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கலையரசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் ரவி வரவேற்றார். முடிவில் பொறுப்பாளர் பாண்டுரெங்கன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story