திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2019 2:05 AM IST (Updated: 21 Feb 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மனைவி கோமதி (வயது 28). நேற்று முன்தினம் கோமதி தன் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி, உன்னையும் உன் கணவரையும் வெட்டிக்கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளார்.

இது குறித்து கோமதி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story