கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம்
கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சாந்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் வெண்ணிலா அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக அரசு பஸ் இயக்கப்படவில்லை.
இதனால் தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இட நெருக்கடியும் உள்ளது. எனவே கறம்பக்குடி-சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும். இல்லையேல் வியாபாரிகள் சார்பில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். கறம்பக் குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். கறம்பக்குடியில் நடைபெறுகிற திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், அப்துல்அஜிஸ், அப்துல்கரீம், ரோஸ்சீனிஅப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வேல் சரவணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story