பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் 3 முறை ஏற்பட்டதால் மக்கள் பீதி


பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் 3 முறை ஏற்பட்டதால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 21 Feb 2019 3:34 AM IST (Updated: 21 Feb 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தொடர்ந்து 3 முறை ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

வசாய்,

பால்கர் மாவட்ட மக்களை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நிலநடுக்கம் அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் அவர்கள் பீதியில் உறைந்து உள்ளனர். பூகம் பம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 2 வயது குழந்தை பலியானது.

பலரும் இன்னும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

3 முறை நிலநடுக்கம்

இந்த நிலையில், நேற்று மீண்டும் பால்கரில் நில நடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணி, மதியம் 1.24 மணி, 1.28 மணி என 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த 3 நிலநடுக்கம் முறையே ரிக்டர் அளவு கோலில் 2.9, 2.9 மற்றும் 3.1 ஆக பதிவானது.

இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அடுத்தடுத்து அச்சுறுத்தி வரும் நிலநடுக்கத்தால் பால்கர் பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

Next Story