வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 3:56 PM GMT)

வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் புவனேந்திரன் (வயது60). ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர். இவருடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சி வேலூரில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக புவனேந்திரன் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வேலூருக்கு சென்றிருந்தார்.

நேற்று காலை புவனேந்திரன் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்திருந்தது. அதில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புவனேந்திரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி நடத்தி வருகின்றனர்.

Next Story