மத்தூர் அருகே 1,200 கிலோ குட்கா, பான்மசாலா கடத்திய 4 பேர் கைது


மத்தூர் அருகே 1,200 கிலோ குட்கா, பான்மசாலா கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2019 3:30 AM IST (Updated: 21 Feb 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே 1,200 கிலோ குட்கா, பான் மசாலா கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் சரக்கு வேன் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரமாக நிற்பதாக மத்தூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்த உடன் வேன் அருகில் நின்று கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓட முயன்றார்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை சோதனை செய்தனர்.

அதில், ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 1,200 கிலோ குட்கா, பான்மசாலா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முரளி, சுரேஷ், பஞ்சாச்சரம், மூர்த்தி என்பதும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு அவற்றை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா, பான்மசாலா, அவற்றை கடத்த பயன்படுத்திய கார், சரக்கு வேன் மற்றும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story