திருவாரூர் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.
கோட்டூர்,
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட 18-வது மாநாடு கோட்டூரில் நடந்தது. மாநாட்டுக்கு பெருமன்ற மாவட்ட துணை தலைவர்கள் சரவணன், சிவச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு கொடியை இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச்செயலாளர் சுஜாதா ஏற்றி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் பழனி வரவேற்றார்.
தியாகிகளின் நினைவு சின்னத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், மாநில செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் முருகேசு, முன்னாள் எம்.பி. செல்வராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும். கோட்டூரில் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். குடும்பத்தில் வயது வந்து படித்த இளைஞர் ஒருவருக்கு சமூகநீதி அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story