நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் ஜி.கே.வாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2019 5:45 AM IST (Updated: 23 Feb 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விட்டது. த.மா.கா ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மேலும் மக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு இன்னும் 2 நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

த.மா.கா பலம் பெற வேண்டும். நாடு வலிமையடைய வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் கூட்டணி அமைக்கப்படும்.

நம்முடைய நாட்டை பாதுகாக்கும் வீரர்களை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். இதற்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story