வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3,453 மையங்களில் சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3,453 மையங்களில் சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது
x
தினத்தந்தி 24 Feb 2019 3:30 AM IST (Updated: 23 Feb 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3,453 மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் இன்றும் நடக்கிறது.

வேலூர்,

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் பெயரை சேர்க்கவும், 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 453 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் அந்தந்தப்பகுதி இளைஞர்கள், பெண்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

பலர் முகவரி மாற்றம், பெயர் நீக்கத்திற்கும் விண்ணப்பம் கொடுத்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story