3,234 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,234 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணியின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 3,234 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது.
இந்த முகாமின்போது 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக பிறப்பு சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடத்திற்கு ஆதாரமாக குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் அஞ்சல் உள்ள ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் அந்தந்த வாக்குச்சாவடி நிர்ணய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உரிய படிவத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.
Related Tags :
Next Story