பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 9 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 9 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 9 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர்,

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 1-ந் தேதி தொடங்க உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 345 மாணவர்கள், 16 ஆயிரத்து 285 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டத்தில் 100 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை குறிப்பிட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வினாத்தாள்கள் இறக்கி வைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 2, சிதம்பரத்தில் 2, வடலூரில் 2 என 9 வினாத்தாள் மையங்கள் உள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story