நாகையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்பு


நாகையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:00 AM IST (Updated: 24 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், நாகை மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள், குற்றவாளிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேசுகையில், இரு மாவட்டங்களுக்கு இடையே உள்ள சோதனைச்சாவடிகளை பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள், பணம் போன்றவைகளை கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என்றார்.

இதில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story