கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ராமநகர்,
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய தாவது:-
மாநிலத்தில் எனது தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டணி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜனதாவினர் நினைக்கின்றனர். கூட்டணி ஆட்சியை பாதுகாத்து கொள்ளும் சக்தி எனக்கு இருக்கிறது. என்னுடன் மந்திரி டி.கே.சிவக்குமார் இருக்கிறார்.
அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது நாடாளுமன்ற தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். கடந்த 4½ ஆண்டுகளாக விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும், மத்தியில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் விவசாயிகள் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை வந்துள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story