வைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி


வைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 11:00 PM GMT (Updated: 24 Feb 2019 8:01 PM GMT)

வைகோ காங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது என்று வசந்த குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் பா.ம.க. திடீரென உருவான கூட்டணி அல்ல. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணத்தின் மூலம் சேர்ந்த கூட்டணி ஆகும். இந்த கூட்டணிக்கு கொள்கை மற்றும் கோட்பாடுகள் கிடையாது.

கழக கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து கொண்டு, 40 தொகுதிகளிலும் எங்களுடைய கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். வைகோவுடன், காங்கிரஸ் நேரடி கூட்டணி கிடையாது. கூட்டணி தர்மத்துக்காக வேண்டுமென்றால் வைகோ கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரசாரம் செய்யும்.

நாடாளுமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட கூடாது என்கிறார்கள். ஆனால் அது சட்டம் அல்ல. வெறும் அறிவுரை தான். நான் கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு அதிக வாக்குகள் வாங்கியதால், இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றால், குமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். தி.மு.க. கூட்டணிக்கு ஜி.கே.வாசன் வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். ரஜினி எனக்கு மட்டும் அல்ல, எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story