திருச்சி விமான நிலையத்தில் தாயை காருக்கு காவல் வைத்து விட்டு பெங்களூருக்கு பறந்த மதபோதகர்
திருச்சி விமான நிலையத்தில் தாயை காருக்கு காவல் வைத்து விட்டு மதபோதகர் பெங்களூருக்கு விமானத்தில் பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டு,
பெங்களூருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது65), இவரது மனைவி மரிய மகிழ்ச்சி (62). இவர்களது மகன் ஜெரோம் (39). வின்சென்டும், ஜெரோமும் பெங்களூருவில் மத போதகர்களாக உள்ளனர். நேற்று முன்தினம் காலை ஜெரோம் தனது காரில் தந்தை வின்சென்ட், தாய், மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். காரை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் கார்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினார். மரிய மகிழ்ச்சியை மட்டும் காரில் உட்கார வைத்து விட்டு வின்சென்ட், ஜெரோம் உள்பட அனைவரும் விமானத்தில் ஏறி பெங்களூருக்கு சென்று விட்டனர். மரிய மகிழ்ச்சி மட்டும் காரில் தனியாக உட்கார்ந்து இருந்தார். காலையில் நிறுத்தப்பட்ட கார் இரவு வரை எடுத்து செல்லப்படாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வந்து அந்த காரை சோதனை போட்டனர். அப்போது மரிய மகிழ்ச்சி தனது கணவர், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அவசர வேலையாக பெங்களூருக்கு விமானத்தில் சென்று விட்டதாகவும், தான் மட்டும் காருக்கு காவல் இருப்பதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மரிய மகிழ்ச்சியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவை தான் என தெரியவந்தது. எனவே தனியாக தவித்துக்கொண்டிருந்த மரிய மகிழ்ச்சியை விமான நிலையத்திற்குள் அழைத்து சென்று தண்ணீர் மற்றும் உணவு வழங்கினா ர்கள். பின்னர் மரிய மகிழ் ச்சி மீண்டும் காருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டார். காரை எடுத்து செல்ல முடியாதபடி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதன் சக்கரங்களில் பூட்டு போட்டனர். இந்நிலையில் நேற்று காலை வின்சென்ட் மட்டும் ஒரு டிரைவருடன் வந்து காரை எடுத்து செல்ல முயன்றார். காரை எடுக்க முடியாத படி பூட்டு போடப்பட்டு இருந்ததால் விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி காரை ஓட்டி செல்ல உதவும் படி கேட்டார். இத னை தொட ர்ந்து அவரிடம் எழுதி வாங்கி கொ ண்டு அதிகாரிகள் காரை விடுவித்தனர். பின்னர் அவர் தனது மனைவியை அழை த்துக்கொ ண்டு காரில் சென்று விட்டார். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story