ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி,

முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் எம்.பி. சுப்பிரமணி யபுரம் உள்பட 15 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார். மேலும் ஸ்ரீரங்கம், உறையூர், பொன்மலை, காட்டூர் உள்ளிட்ட இடங் களில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்பட நலத்திட்ட உதவிகளை வழங் கினார். மன்னார்புரம் விழி இழந்தோர் மையம், புத்தூர் விழி இழந்தோர் பள்ளியில் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இது தவிர விழா நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட் டது.

பள்ளி மாணவ -மாணவி களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப் பட்டது. மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல இடங்களில் 710 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் பகுதி செயலாளர் பாலசுப்பிர மணியன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், செல்வராஜ், கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சமயபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் எம்.பி. தலைமை தாங்கி ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் பழையூர் அ.தி.மு.க. கிளை செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி, ஈச்சம் பட்டி பி.தியாகராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story